ஜம்பு மஹரிஷி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கம்

நமது சமூதாயத்தில் மத்தியரசு, மாநில அரசு, தனியார் துறைகளில் பணிபுரியும் அலுவலர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், மருந்தியல் வல்லுநர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் மற்ற உயர்கல்வி பயின்றவர்களை ஒருங்கிணைப்பதற்காக இந்த சங்கம் துவக்கப்பட்டுள்ளது.

Read More

News & Events

வன்னியகுல க்ஷத்திரிய மாணவர் பரிசளிப்பு மற்றும் சாதனையாளர் விருது வழங்கும் விழா 2026

ஜம்பு மஹரிஷி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கம் மற்றும் நல் வழிகாட்டும் ஒளி விளக்கு மாத இதழ் சார்பில் 2025-2026ஆம் கல்வி ஆண்டில் நடைபெற்ற பொது தேர்வு மற்றும் பல்கலைகழகத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற நமது சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் சாதனை படைத்த சொந்தங்களுக்கு வருகின்ற 2026 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 4-ம் தேதி, (ஞாயிற்றுக்கிழமை) காலை 09.00 மணி அளவில் சென்னை-77, வேலப்பன்சாவடி, எண்.127, பூந்தமல்லி நெடுஞ்சாலை, S.R.S. திருமண மண்டபத்தில் (திருவேற்காடு ஆர்ச் எதிரில்), பரிசளிப்பு மற்றும் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளதால் அனைவரும் கலந்துக் கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

குறிப்பு: 1) மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், முகவரி, கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் 15.09.2026க்குள் அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

அனுப்ப வேண்டிய முகவரி: முனைவர். பெ. முத்துசாமி தலைவர் ஜம்பு மஹரிஷி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கம் எண். 1/1, சடையப்ப முதலி தெரு, ரெட்டிக்குப்பம் ரோடு, சைதாப்பேட்டை, சென்னை – 600015. மின் அஞ்சல் : jambumbc2022@gmail.com

🙏 நல்ல நோக்கத்திற்கு உங்கள் பங்களிப்பு

நமது சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சியையும், திறமை மற்றும் சாதனைகளையும் ஊக்குவிக்கும் இந்த நல்ல முயற்சிக்கு தங்களால் இயன்ற நன்கொடையை வழங்கி ஆதரிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

“ஒரு சிறிய பங்களிப்பு – ஒரு மாணவரின் பெரிய கனவிற்கு ஆதரவு.”

“ஒருதங்களின் நன்கொடை மற்றும் ஆதரவு, மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால சாதனைகளுக்கு பெரும் ஊக்கமாக அமையும்.

“ஒருநன்கொடை வழங்க விரும்பும் நல்ல உள்ளங்கள் விழா ஏற்பாட்டாளர்களை தொடர்பு கொள்ளலாம்.

🙏 வாருங்கள்… விழாவை சிறப்பிப்போம்!

🙏 வாழ்த்துவோம்… சாதனையாளர்களை ஊக்குவிப்போம்!

🙏 ஆதரிப்போம்… மாணவர்களின் எதிர்காலத்தை!

அன்புடன், முனைவர் பெ. முத்துசாமி தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்கள்:

9551392545

Vanniyar Matrimony
© Copyright 2026 - Powered by Jambu Maharishi MBC Welfare Association
Design & Developed By DRAGME