ஜம்பு மஹரிஷி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கம்
சங்கத்தின் நோக்கங்கள்
நமது சமூதாயத்தில் மத்தியரசு, மாநில அரசு, தனியார் துறைகளில் பணிபுரியும் அலுவலர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், மருந்தியல் வல்லுநர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் மற்ற உயர்கல்வி பயின்றவர்களை ஒருங்கிணைப்பதற்காக இந்த சங்கம் துவக்கப்பட்டுள்ளது.
சங்கத்தின் செயல்பாடுகள்
1. சமூதாய சொந்தங்களை ஒருங்கிணைத்து ஒருவருக்கொருவர் உதவி செய்தல்
2. கிராம புறத்திலிருந்து ஏழைக்குடும்பத்தைச்சார்ந்த முதல்முறையாக அரசுக்கல்லூரிகளில் தொழில்கல்வி பட்டப்படிப்பு பயில தேர்வு பெறும் முதலாண்டு மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் உதவி செய்தல்.
3. உயர்கல்வி மற்றும் பட்டமேற்படிப்பு, Ph.d வழிகாட்டுதல்.
4. திருமண தகவல் மையம் நடத்துதல்.
5. சாதனை படைக்கும் நம் சொந்தங்களை பாராட்டி ஊக்குவித்தல்.
6. பதவி உயர்வு, பணி ஒய்வு மற்றும் கௌரவ பதவி பெற்ற நமது சொந்தங்களுக்கு பாராட்டு விழா நடத்துதல்.
7. மத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையங்கள் (Union Public Service Commition, Staff Selection commission, Banking recruitment, TamilNadu Public Service Commission,) நடத்தும் போட்டித்தேர்வில் பங்கேற்க விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
8. மத்தியரசு நடத்துல் கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்காக நடைபெறும் போட்டித்தேர்வில் (IIT, NIT, Joint Entrance Exam, NEET ( National Eligibility Cum Entrance Test) AIIMS ( All India institute of Medical Science) பங்கேற்க விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
9. மத்திய மற்றும் மாநில அரசு கல்வி நிறுவனங்களில் நிதி உதவியுடன் பட்டமேற்படிப்பு பயில நடைபெறும் போட்டித்தேர்வில் Graduate Aptitude Test in Engineering (GATE), Graduate Pharmacy Admission Test (GPAT), Junior Research Fellowship (JRF), National Eligibility Test (NET), Common Admissin Test (CAT)
State Level Eligibility Test (SLET) பங்கேற்க வழிகாட்டுதல்.
10. சுய தொழில் தொடங்க வழிகாட்டுதல் மற்றும் ஊக்குவித்தல்.
11. மருத்துவர்களை ஒருங்கிணைத்து அவர்கள் மூலம் மருத்துவ உதவி பெற வழி வகை செய்தல்.
12. வழக்கறிஞர்களை ஒருங்கிணைத்து அவர்கள் மூலம் சட்ட ஆலோசனை பெற வழிவகை செய்தல்.
மேற்கண்ட நோக்கங்களுக்காக தொடங்கப்பட்ட, இந்த அமைப்பில் தாங்களும், தங்களுக்கு தெரிந்த சமூதாய சொந்தங்களை உறுப்பினர்களாக சேர்த்து சமூதாய வளர்ச்சிக்கு பேராதரவினை நல்குமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.